பி.எஸ்.எல்.வி.28 ராக்கெட்: விண்ணில் செலுத்துவதற்கான கவுன்டவுன் தொடங்கியது

பி.எஸ்.எல்.வி.28 ராக்கெட்: விண்ணில் செலுத்துவதற்கான கவுன்டவுன் தொடங்கியது

இஸ்ரோவின் வர்த்தக ரீதியான செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி.28 ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான கவுன்டன் தொடங்கியது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான – இஸ்ரோ, வணிக ரீதியாக செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த, ‘ஆன்டிரிக்ஸ்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, பிரிட்டன் நாட்டின், ‘டிராஸ்டர் மேனேஜ்மெண்ட் கன்சல்டேஷன்’ என்ற, 1,440 கிலோ எடை கொண்ட, மூன்று செயற்கை கோள்களும், அமெரிக்காவை சேர்ந்த, ‘சரே’ நிறுவனத்தின், மைக்ரோ மற்றும் நானோ என, இரு செயற்கைகோள்களும், 10ம் தேதி இரவு, 9:58 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., சி – 28 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகின்றன. இதற்கான, 62.50 மணி நேர,கவுன்டவுண்’ இன்று காலை, 7:30 மணிக்கு துவங்கியது..

பூமியின், இயற்கை வளங்கள், மண்வளம், நகர்புற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட ஆய்வு பணிகளை, இந்த செயற்கை கோள்கள் செய்யும். இந்த செயற்கைகோள்களின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள் என இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த சர்ரே செயற்கைக்கோள் தொழில்நுட்ப நிறுவனம் (எஸ்.எஸ்.டி.எல்), “டிஎம்சி3-1′, “டிஎம்சி3-2′, “டிஎம்சி3-3′ ஆகிய மூன்று செயற்கைக்கோள்களை தயாரித்துள்ளது.

இந்த மூன்று செயற்கைக்கோள்களும் தலா 447 கிலோ கிராம் எடையும், 3 மீட்டர் நீளமும் கொண்டவையாகும்.

இந்த மூன்று செயற்கைக்கோள்களும், பி.எஸ்.எல்.வி-சி28 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளன. இந்த செயற்கைக்கோள்கள், பூமியை 120 பாகையில் (டிகிரி) தனித்தனியாக வலம் வந்து, பூமியைப் படம் பிடித்து தினந்தோறும் அனுப்பி வைக்கும்.