அரசியலமைப்புச் சட்டம் 104 என்ன சொல்கிறது?

அரசியலமைப்புச் சட்டம் 104 என்ன சொல்கிறது?

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகை ரேகா ஆகியோர் 2012-இல் மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவியேற்றனர். ஆனால் இதுவரை சச்சின் டெண்டுல்கர் 3 நாட்களும் ரேகா 7 நாட்களும் மட்டுமே அவைக்கு வந்துள்ளனர். உறுப்பினர் 60 நாட்களாக அவைக்கு வராமல் இருந்தால் அவர்களது பதவி காலியானதாகக் கருதப்படும் என்ற அரசியலமைப்புச் சட்டம் என்னவாயிற்று என சில கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு மாநிலங்களையின் துணைத் தலைவர் பி.ஜே.குரியன், அரசியலமைப்புச் சட்டம் 104படி ஒரு எம்.பி 60 நாட்கள் வரவில்லை எனில் அவர்களது இடம் காலியானதாகக் கருதப்படும். சச்சின் இதுவரை 40 நாட்கள் அவைக்கு வரவில்லை. ரேகாவும் அதற்கு குறைவான நாட்களே வரவில்லை. எனவே இருவரும் அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை என பதிலளித்தார்.

இதற்கிடையில் தனது சகோதரர் அஜித்துக்கு இதய அறுவை சிகிச்சை நடந்ததால் தன்னால் டெல்லிக்கு வந்து மாநிலங்களவைக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என சச்சின் டெண்டுல்கர் விளக்கமளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *