அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மோடியுடன் சந்திப்பு

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மோடியுடன் சந்திப்பு

அமெரிக்க பாதுக்காப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் 8-8-2014 அன்று சந்தித்துப் பேசினார் . ஈராக்கின் பாதுகாப்பு நிலைமை சீர்குலைந்து செல்வதைப் பற்றியும் இப்பிரச்னையின் பின் விளைவுகளைப் பற்றியும் பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். ஈராக் நிலையை சமாளிக்க, அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ள திட்டங்களைப் பற்றி பிரதமரிடம் சக் ஹேகல் விவரித்தார். ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ வீரர்களைப் பாதுகாக்கும் விதத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் மீது விமானம் மூலம் தாக்குதல் நடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளதையும் பிரதமரிடம் சக் ஹேகல் எடுத்துக் கூறினார்.

இந்திய அமெரிக்க இரு தரப்பு உறவுகளைப் பொருத்தவரை மத்தியில் அமைந்துள்ள புதிய அரசுடன் அமெரிக்கா மேற்கொண்டு வரும் உயர்நிலை அளவிலான பேச்சுவார்த்தையை வரவேற்பதாக பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x