About

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல் – (குறள் 471)

போட்டித்தேர்வை பொறுத்தவரை, இக்குறளில் வந்துள்ள வினை வலிமை என்பது போட்டித் தேர்வுகளின் வலிமையைக் குறிக்கும். தன் வலிமை என்பது உங்களது வலிமையைக் குறிக்கும். மாற்றான் வலிமையென்பது உங்களின் சக போட்டியாளர்களைக் குறிப்பது. துணைவலிமையென்பது நீங்கள் வெற்றி பெற உங்களுக்குத் துணையாக வரும் நபர்களைக் குறிப்பது.

தூக்கிச் செயல் என்பது இவர்கள் அனைவரது வலிமையையும் அறிந்து, உங்களின் வலிமையையும் அறிந்து இவர்களை விட ஒரு படி மேலே உங்களை உயர்த்திக் கொள்வது ஆகும்.

இங்கே துணை வலிமையாக உங்களுக்கு என்றும் Exam மாஸ்டர்துணைக்கு வரும் என்று நம்புகிறோம்.

உங்களுக்கு அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாக இவ்விதழ் திகழும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

போட்டியே தேர்வு! தேர்வே போட்டி!!

போட்டித் தேர்வு என்றால் பலருக்கு என்னவென்றே தெரியாத நிலை உள்ளது. இதனால் அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருந்தும் கூட சிலரால் தேர்வில் வெற்றி பெற முடிவதில்லை. இதற்கு முழுக்க முழுக்க அவர்களின் அறியாமையே காரணம் ஆகும்.

ஒரு சிலருக்கு போட்டித் தேர்வு பற்றி தெரிந்திருந்தும், சரியாகத் திட்டமிடாதபடியால் தோல்வியைத் தழுவுகின்றனர். இதனால் ஆண்டுகள் பல கடந்தும் தேர்வில் வெற்றியடைய முடியாமல் வயதைத் தொலைத்து, வாழ்க்கையைத் தொலைத்து அவமானத்தால் மனமுடைந்து போகின்றனர்.

இவ்வாறு எத்தனையோ அனுபவங்கள் கொண்ட எத்தனையோ நபர்கள் நம்மிடையே உலவுகின்றனர்.

சிலர் மட்டுமே விழிப்புணர்வு, விடாமுயற்சி, கடின உழைப்பு என்கின்ற படிக்கட்டுகளில் ஏறி அரசுவேலை என்ற கனியைப் பறிக்கின்றனர்.

போட்டித் தேர்வு மையங்கள் உங்களுக்கு வழங்குவது என்ன? பாடப்புத்தகங்கள், மாதிரி தேர்வுகள், வினாக்களுக்கான விரிவான விளக்கங்கள். இதையே, உங்களுக்கு ஒரு ’இதழ் வழங்கினால் ஒவ்வொரு வீடும் போட்டித் தேர்வு மையமே….

ஆம், Exam மாஸ்டர் என்ற இவ்விதழ் சுமார் 40 ஆண்டுகளாக கல்விப்பணியில் தன்னை முழுமையாகஈடுபடுத்திக் கொண்ட சுரா குழுமத்திலிருந்து வெளிவரும் போட்டித் தேர்வுக்கான முதல் தர இதழாகும். இவ்விதழ் உங்களுக்கு மாதிரித் தேர்வுகளை வழங்கும்; முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட வினாக்களுக்கு விரிவான விடைகளை அளிக்கும்; பாடத்திட்டப்படி பாடக் குறிப்புகளை வழங்கும். வேறென்ன? தேர்வுக்குத் தயாராவோம், வாருங்கள்…

உங்கள் கையில் Exam மாஸ்டர் ஒரு வழிகாட்டும் விளக்காக அமையும்.

4 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
10 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
sathish
sathish
7 years ago

Hi sir ur guide is good to prepare but every month boook la full current affairs varadhu kedayadhu old news dhaan adhigama vsrudhu pls correct aah podunga i request

sathish
sathish
7 years ago

Pls enga future unga books mela nambi vaanguraanga pls dont neglect my comments

Gopalakrishnan
Gopalakrishnan
7 years ago

I want the subscribe the current current affairs book every month . Will have option available to send my house using post office?

Gopalakrishnan
Gopalakrishnan
7 years ago

I want the subscribe the current current affairs book every month . Will you have any option available to send my house using post office?

hari
hari
7 years ago

how to read in january month exame master Magazine in online.

sindhu
sindhu
6 years ago

How to get previous month exam master book Sir?

sindhu
sindhu
6 years ago

It is very useful for competitive exams.

Govindasamy p
Govindasamy p
6 years ago

I want to subscribe the monthly issue of current affairs. Guide me how to avail the same.

JOHN DE BRITTO
JOHN DE BRITTO
6 years ago

I WOULD LIKE TO RENEW THE SUBSCRIBE , HOW TO RENEW? KINDLY INFORM US – COLLEGE LIBRARY

Selva jeeva kumar
Selva jeeva kumar
5 years ago

Sir. சந்தா no ena podanum . Pls replay pannunga sir

10
0
Would love your thoughts, please comment.x
()
x