கல்பாக்கம் தோரியம் அணு உலை அடுத்த ஆண்டு செயல்படத் தொடங்கும்.

கல்பாக்கம் தோரியம் அணு உலை அடுத்த ஆண்டு செயல்படத் தொடங்கும்.

சென்னையை அடுத்த கல்பாக்கத்தில் தற்போது கட்டப்பட்டுவரும் தோரியம் அணு உலை அடுத்த ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக, உள்நாட்டிலேயே தோரியம் அணு உலை தயாராகி வருகிறது. உலகிலேயே தோரியம் அதிகமாக உள்ள மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது.

இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமாக உள்ள நாட்டில், அதிகரித்து வரும் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நம் நாட்டில் உள்ள வளங்களை அதிக அளவு பயன்படுத்த வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு நம் நாட்டில் அதிகமாக உள்ள தோரியத்தைக் கொண்டு அணு மின்சாரம் தயாரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகம், கேரளம், ஒடிஸா மற்றும் நாட்டின் இதர சில இடங்களில் தோரியம், கடற்கரை மணலில் உள்ள மோனாசைட் வடிவத்தில் காணக் கிடைக்கின்றன.