8 சிறுவர்களுக்கு தேசிய இளந்திரு விருது

மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் ’தேசிய இளந்திரு விருதுதமிழகத்தைச் சேர்ந்த 8 சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அகில இந்திய அளவில் மேடைக்கலை, படைப்புக்கலை, அறிவியல் கலை, எழுத்துக்கலை ஆகியவற்றில் புதுமைகள் படைத்திடும் 9 வயது முதல் 16 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ’தேசிய இளந்திரு விருதுகுடியரசுத் தலைவரால் வழங்கப்படுகிறது.

2012 – ஆம் ஆண்டுக்கான தேசிய இளந்திரு விருது பெறுவோர் பட்டியல் :

  • அனந்திதா ராமச்சந்திரன், மேடைக்கலை (பரதநாட்டியம்), 10-ஆம் வகுப்பு, சர். சிவசாமி கலாலயா மேல்நிலைப்பள்ளி, மயிலாப்பூர், சென்னை.
  • கமலாதேவி லிங்கா ரவீந்திரநாத், மேடைக்கலை (பரத நாட்டியம்), 11 -ஆம் வகுப்பு, பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளி, கே.கே.நகர், சென்னை.
  • கே.முத்துக்குமாரசாமி, படைப்புக்கலை (கைவினை), 10-ஆம் வகுப்பு, செயின்ட் தாமஸ் மெட்ரிக் பள்ளி, பிராட்வே, சென்னை.
  • தீபரக்ஷனா, படைப்புக்கலை (ஓவியம்), 10-ஆம் வகுப்பு, அண்ணா ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளி, அண்ணா நகர், சென்னை.
  • அனுபமா ரவிச்சந்திரன், எழுத்துக்கலை, 10 ஆம் வகுப்பு, பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளி, நுங்கம்பாக்கம், சென்னை.
  • செஷாங், எழுத்துக்கலை, பிளஸ் 2, சிஷ்யா மேல்நிலைப்பள்ளி, ஒசூர், தருமபுரி மாவட்டம்.
  • தியாகராஜன் மனோ அரவிந்த், எழுத்துக்கலை, 9-ஆம் வகுப்பு, ஏ.ஆர்.எல்.எம். மெட்ரிக் பள்ளி, கடலூர்.
  • நிகிலா ராமன், எழுத்துக்கலை, பிளஸ் 2, பி.எஸ்.பி.பி.மில்லினியம் பள்ளி, கிருகம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்.

தேசிய இளந்திரு விருது பெறும் மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் விருதுடன் ` 10 ஆயிரம் மதிப்புள்ள கிஷான் விகாஸ் பத்திரம், நினைவுப்பரிசு, சான்றிதழ் ஆகியவை குடியரசுத் தலைவரால் விரைவில் வழங்கப்படவுள்ளது. மேலும் இந்த மாணவர்களுக்கு தமிழக அரசு தலா ` 10 ஆயிரம் நிதியுதவி வழங்க உள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x