10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வில் புதிய முறை

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வில் புதிய முறை

நெல்லை : 10, 12ம் வகுப்பு மாணவர்களின் உண்மையான பாட அறிவை பரிசோதிக்கும் வகையில் காலாண்டு தேர்வினை முழு ஆண்டு தேர்வு போல நடத்த வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.காலாண்டு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை சமீபத்தில் வெளியிட்டது. 10ம் வகுப்பிற்கு செப். 17ம் தேதி தேர்வுகள் தொடங்குகின்றன. 26ம் தேதி வரை தேர்வு நடைபெறும். பிளஸ்2 வகுப்புகளுக்கு செப். 15ல் துவங்கி செப். 26ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. 

இந்நிலையில் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிதலைமையாசிரியர்களும் இத்தேர்வை ஆண்டிறுதி தேர்வு போல் நடத்த வேண்டுமென கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஒரு அறைக்கு 20 மாணவ, மாணவியர் வீதம் தேர்வெழுத ஏற்பாடு செய்ய வேண்டும். தேர்வறை ஒன்றுக்கு ஒரு கண்காணிப்பாளர் வீதம் நியமனம் செய்யப்பட வே ண்டும். எந்த பாடத்திற்கு தேர்வு நடைபெறுகிறதோ? அந்த பாட ஆசிரியர் களை அறை கண் காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தக்கூடாது.

ஆசிரியர்கள் தங்கள் பாட தேர்வுகள் முடிந்த உடன் விடை த்தாள்களை 3 நாட்களுக்குள் பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டின் அடிப்படையில் திருத்திட வேண்டும். மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை உடனடியாக மாணவர்களிடம் அளித்து சரிபார்த்த பின்னர் மாணவர்களின் மதிப்பெண்களை www.chiefeducationalofficer.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் இந்த ஆண்டு 100 சதவீத தேர்ச்சியை எட்ட வேண்டும் என்பதற்காக இந்தமுறை கையாளப்படுவதாக கூறப்படுகிறது.மேலும் காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுக்கும் மாணவர்களுக்கு கூடுதல் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/5/d790946132/htdocs/exammaster.co.in/wp-content/plugins/slickquiz/php/slickquiz-front.php on line 59