10ம் வகுப்பு துணைத்தேர்வு: செப்.,2 முதல் ஆன்லைனில் நுழைவுச்சீட்டு பதிவேற்றம்

10ம் வகுப்பு துணைத்தேர்வு: செப்.,2 முதல் ஆன்லைனில் நுழைவுச்சீட்டு பதிவேற்றம்

நடைபெறவுள்ள செப்டம்பர் / அக்டோபர் 2014, 10ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வுகள் சேவை மையங்களில் SSLC “SEPTEMBER/OCTOBER 2014 EXAMINATION – HALL TICKET”  என்பதை கிளிக் செய்தால் வரும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் Application Number மற்றும் பிறந்த தேதியினை (Date of Birth), பதிவு செய்தால் அவர்களுடைய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் (தத்கல்) விண்ணப்பிப்பதற்கான நாட்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/5/d790946132/htdocs/exammaster.co.in/wp-content/plugins/slickquiz/php/slickquiz-front.php on line 59