நவம்பர் 17

நவம்பர் 17
 • 1869 – சூயஸ் கால்வாய் அதிகார பூர்வமாக போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்ட நாள். இக்கால்வாய் 25-4-1859 இல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது.
 • 1928 – சைமன் கமிஷன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக லாகூரில் அக்டோபர் 30- ஆம் தேதி ஊர்வலத்தை தலைமை தாங்கி நடத்திச் சென்ற பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் காலமானார். அந்த ஊர்வலத்தில் போலீசார் காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தியதில் ஏற்பட்ட காயங்களால் அவர் உயிரிழந்தார்.
 • 1956 – காஷ்மீரில் நடந்த வாக்கெடுப்பில் இந்தியாவுடன் இணைவதற்குப் பேராதரவு கிடைத்தது.
 • 1966 – இந்தியாவைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி ரீட்டா ஃபாரியா உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த உலக அழகிப் போட்டி லண்டனில் நடந்தது.
 • 1978 – மக்கள் கோயில் என்ற அமைப்பை நிறுவிய ஜிம் ஜோன்ஸ் என்ற பாதிரியார் தன்னைப் பின்பற்றுபவர்களுக்காக தென் அமெரிக்காவில் கயானா என்னுமிடத்தில் ஒரு காட்டில் ’ஜோன்ஸ் டவுன் என்ற குடியிருப்பை அமைத்து, அவர்களுடன் குடியேறினார். இந்த அமைப்பின் மேல் பல புகார்கள் வந்தன. அதை விசாரிக்க அமெரிக்க காங்கிரஸைச் சேர்ந்த லியோ ரியானும் மற்றும் 8 பத்திரிகையாளர்களும் அங்கு சென்றனர்.
 • லியோவும், மூன்று பத்திரிகையாளர்களும் அங்கு சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர் பழச்சாறில் பொட்டாசியம் சயனைடைக் கலந்த ஜோன்ஸ், தன்னை பின்பற்றுபவர்களுக்கு அதை குடிக்கக் கொடுத்தார். அந்த விஷச் சாறைக் குடித்த 900 பேர் (குழந்தைகளையும் சேர்த்து) மரணமடைந்தனர். ஜோன்ஸ் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
 • உலக வலிப்பு நோய் தினம் :

 • கால், கை வலிப்பு நோய் காக்காய் வலிப்பு நோயாகி விட்டது. வலிப்பு நோய்க்கும், காக்காய்க்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? இல்லை. இது நரம்பு தொடர்பான நோய். (நுயீடைநயீளல).
 • திடீரென உடல் நடுக்கத்துடன் வலிப்பு வரும். பிறகு நினைவு இழந்து விடுதலும், வலிப்பு நின்றதும் பழைய இயல்பான நிலைக்கு திரும்பி விடுதலும், பலரும் அறிந்த ஒன்றுதான்.
 • நரம்பு நோய் நிபுணர்களிடம் தகுந்த சிகிச்சைப் பெற்று குணமாவதற்கான முயற்சிகளை இந்நோய் உள்ளவர்கள் எடுத்தல் வேண்டும்.
 • வாகனம் ஓட்டுதல், தீயணைப்பு, உயரமான கட்டிடங்களில் கட்டுமானப் பணி செய்தல் ஆகியவற்றை இந்நோயுள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.
 • வலிப்பு நோய் பற்றிய விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தவே உலக வலிப்பு நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.