நவம்பர் 06

நவம்பர் 06
  • 1917 – நியூயார்க் மாநிலம், மாநிலத்தேர்தலில் பெண்கள் வாக்களிக்க வகை செய்யும்படியான அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது.
  • 1943 – ஜப்பான் அரசு அந்தமான், நிக்கோபார் தீவுகளை சுபாஷ் சந்திரபோஸின் தலைமையிலான ஆஜாத் ஹிந்த் அரசிடம் ஒப்படைத்தது. அவற்றின் பெயர்களும் ஷாகித், ஸ்வராஜ் தீப் என மாற்றப்பட்டன.
  • 1759 – பாளையக்காரர் பூலித்தேவரின் நெற்கட்டான் செவ்வலைக் கோட்டையை இசபல்கான் கான்சாகிப் என்பவனின் படைகள் வெடிகுண்டுகள் கொண்டு தாக்கின. ஆனாலும் கோட்டையைப் பிடிக்க முடியவில்லை.
  • 1913 – தென்னாபிரிக்காவில் மகாத்மா காந்தி இந்திய சுரங்கத் தொழிலாளர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார்.
  • 1941 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தனது முப்பதாண்டு கால பதவியில் இரண்டாவது தடவையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஜெர்மனியின் தாக்குதலில் 350,000 சோவியத் வீரர்கள் கொல்லப்பட்டிருந்தாலும், ஜெர்மனியர்கள் தமது 4.5 மில்லியன் பேரை இழந்திருப்பதாகவும் சோவியத் வெற்றி கண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Tagged with