துருக்கி நாட்டின் முதல் ஜனாதிபதி தேர்தலில் எர்டோகான் வெற்றி

துருக்கி நாட்டின் முதல் ஜனாதிபதி தேர்தலில் எர்டோகான் வெற்றி

அங்காரா
துருக்கி நாட்டின் முதல் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய பிரதமர் தாயிப் எர்டோகான் 52 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

துருக்கி நாட்டில் ஜனாதிபதி பதவிக்கு இதுவரை நியமன முறைதான் பின்பற்றப்பட்டு வந்தது. எனினும், அங்கு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் ஸ்திரமற்ற நிலை நிலவி வந்தது.
இதன் காரணமாக நேரடியாக ஜனாதிபதியை தேர்வு செய்யும் முறையை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை அண்மைக் காலமாக வலுவடைந்தது. இதையடுத்து அங்கு ஜனாதிபதியை பொதுமக்கள் நேரடியாக ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டு 10-8-2014 அன்று தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் 10 ஆண்டுகளுக்கும மேலாக பிரதமர் பதவி வகித்து வரும் 60 வயது தாயிப் எர்டோகான், அவர் நிறுவிய ஏ.கே. கட்சியின் சார்பில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து குடியரசு மக்கள் கட்சி மற்றும் தேசிய இயக்க கட்சி ஆகியவற்றின் சார்பில் மத்திய தரைக்கடல் பகுதியில் வலிமை வாய்ந்த தலைவராக கருதப்படும் ஏக்மேலிடின் இஷசானோகுலு மற்றும் குர்திஷ் பிரதிநிதியான செலாகட்டீன் டிமிரேட்ஸ் ஆகியோரும் போட்டியிட்டனர்.

தேர்தலில் 52 சதவீத ஓட்டுகளைப் பெற்று எர்டோகான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இஷசானோகுலுக்கு 38.5 சதவீதமும், 9.5 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன.

அதே நேரம் எதிர்க்கட்சி தரப்பினரோ, எர்டோகான் ஏற்கனவே 10 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தவர். அவரே நாட்டின் ஜனாதிபதியாக ஆகி இருப்பதன் மூலம் எதேச்சதிகார போக்கு கொண்ட ஆட்சிதான் இனி துருக்கியில் நடக்கும் என்று அதிருப்தி தெரிவித்து இருக்கிறார்கள்.

மேலும் இனி துருக்கியின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுபவர் எர்டோகானின் நிழலாகத்தான் இருப்பார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *