தமிழக அரசு பள்ளிகளில் 25 வகை தொழிற்கல்வி படிப்புகள்!

தமிழக அரசு பள்ளிகளில் 25 வகை தொழிற்கல்வி படிப்புகள்!

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில், தமிழக அரசு பள்ளிகளில், 25 வகை தொழிற்கல்வி படிப்புகள் துவங்கப்பட உள்ளன.

இதற்காக, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், வகுப்பறை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வுகள் நடக்கின்றன.

மாணவர்கள் தொழிற்கல்வியும் கற்க வேண்டும் என்பதற்காக, அந்தந்த பகுதிகள் சார்ந்துள்ள தொழில்களுக்கு ஏற்ப, ஐ.டி., எலக்ட்ரானிக்ஸ், விவசாயம், ஜுவல்லரி தயாரிப்பு உட்பட, 25 வகை தொழில் படிப்புகள் துவங்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக, ஒன்பதாம் வகுப்பில் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

ஒவ்வொரு பள்ளிகளிலும், அந்த பகுதிகளில் நிலவும் தொழில் சார்ந்த இரண்டு படிப்புகள் துவங்கப்படும்.