டி.என்.பி.எஸ்.சி. குரூப் – 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி. குரூப் – 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் – டி.என்.பி.எஸ்.சி., குரூப் – 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வாணைய அறிவிப்பு

தமிழக அரசில், குரூப் – 4 பணியிடங்களில் காலியாக உள்ள 4,963 பணியிடங்களுக்கான தேர்வை, வரும் 21ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது. இதற்கு 12.75 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில், சரியான முறையில் விவரங்களை பதிவுசெய்து, உரிய விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கான ஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpscexams.net மற்றும் www.tnpsc.gpv.in என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பப் பதிவு எண்ணை பதிவு செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால் டிக்கெட் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள், தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா என்பதை, நிராகரிப்பு பட்டியலில் தெரிந்து கொள்ளலாம்.

நிராகரிப்பு பட்டியலில் இடம்பெறாத, சரியான விவரங்ளை பதிந்து, விண்ணப்ப கட்டணம் செலுத்தியும், ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், பணம் செலுத்தியதற்கான சலான் நகலுடன், பெயர், பதிவெண், விண்ணப்ப, தேர்வு கட்டணம் செலுத்தியதற்கான இடம், வங்கி கிளை அல்லது அஞ்சல முகவரி ஆகிய விவரங்களை, contacttnpsc@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு, இம்மாதம் 17ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.