டிசம்பர் 05

டிசம்பர் 05
  • 1896- சென்னை கன்னிமாரா பொது நூலகம் ஆளுநர் சர் ஆர்தர் ஹாவ்லக் என்பவரால் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது.
  • 1879 தமிழ் உரைநடையின் தந்தை ஆறுமுக நாவலர் மறைந்தார்.
  • 1954 – கல்கி கிருஷ்ணமூர்த்தி, தமிழ் எழுத்தாளர் மறைந்தார்.

கன்னிமாரா பொது நூலகம் :

1890 இல் நிறுவப்பட்ட இந்நூலகத்தில் நாட்டின் மதிக்கத்தக்க, புகழ்பெற்ற பழமையான புத்தகங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

அன்றைய மதராஸ் மாகாணத்தின் ஆளுநராக இருந்த கன்னிமாரா பிரபு மாகாணத்துக்கான பொது நூலகம் அமைக்கும் தேவையை உணர்ந்து 1890 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் நாள் அடிக்கல் நாட்டினார். 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் இந்நூலகம் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது. அப்போது அவர் ஆட்சியில் இல்லாவிடினும் அவருடைய பெயரே நூலகத்துக்கும் சூட்டப்பட்டது.

1948 ஆம் ஆண்டு மதராஸ் பொது நூலகச் சட்டத்தின்படி கன்னிமரா பொது நூலகம் மாநிலத்தின் மைய நூலகமாயிற்று. 1981-ம் ஆண்டு இந்திய நடுவண் அரசின் ஆணைப்படி கன்னிமாரா பொது நூலகம் நாட்டின் களஞ்சிய நூலகமானது. மேலும் இது ஐக்கிய நாடுகளின் களஞ்சிய நூலகமாகவும் உள்ளது.

ஆறுமுக நாவலர் :

பிறப்பு : டிசம்பர் 18, 1822

இறப்பு : டிசம்பர் 5, 1879

ஆறுமுக நாவலர் இலங்கையில் யாழ்ப்பாணம், நல்லூர் என்னும் ஊரில் சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு கடைசி மகனாகப் பிறந்தார்.

இயற்பெயர் ஆறுமுகம்பிள்ளை – திருக்குறள் பரிமேலழகருரை, நன்னுற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல், புராணம், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பதிப்பித்தவர்.

திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவமத சொற்பொழிவு செய்து தமது புலமையை வெளிப்படுத்தி நாவலர் பட்டத்தைப் பெற்றார். சென்னையில் சிலகாலமிருந்து சூடாமணி நிகண்டுரையும் சௌந்தரிய லஹரி உரையும் அச்சிற் பதித்தார்.

தமது இல்லத்தில் வித்தியானு பாலன யந்திரசாலை என்னும் பெயரில் ஓர் அச்சுக்கூடம் நிறுவி பாலபாடம், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் உரை, சிவாலய தரிசன விதி, சைவ சமய சாரம், கொலை மறுத்தல்,
நன்னூல் விருத்தியுரை, திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியுரை, திருமுருகாற்றுப்படையுரை போன்ற பல நூல்களை அச்சிட்டார். திருத்தொண்டர் பெரியபுராணத்தை வசனநடையில் எழுதி அச்சிட்டார். ஞானக்கும்மி, யேசுமத பரிகாரம், வச்சிரதண்டம் ஆகிய நூல்களை வெளியிட்டார்.

கல்கி கிருஷ்ணமூர்த்தி

பொன்னியின் புதல்வர்” என்று புகழப்படுகிற பத்திரிக்கையாளர் கல்கி 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புத்தமங்கலம் என்னும் ஊரில் பிறந்தார். 1921இல் மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவங்கியபோது அவரது கருத்துகளால் ஈர்க்கப்பட்டு கல்கி தனது பள்ளிப்படிப்பை பாதியில் துறந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

படைப்புகள் :

புதினங்கள் :

கள்வனின் காதலி (1937)
தியாக பூமி (1938-1939)
மகுடபதி (1942)
அபலையின் கண்ணீர் (1947)
சோலைமலை இளவரசி (1947)
அலை ஓசை 1948
தேவகியின் கணவன் (1950)
மோகினித்தீவு (1950)
பொய்மான் கரடு (1951)
புன்னைவனத்துப் புலி (1952)
அமர தாரா (1954)
வரலாற்று புதினங்கள் :
பார்த்திபன் கனவு (1941 – 1943)
சிவகாமியின் சபதம் (1944 – 1946)
பொன்னியின் செல்வன் (1951-1954)
சிறுகதைகள் :
சுபத்திரையின் சகோதரன்
ஒற்றை ரோஜா
தீப்பிடித்த குடிசைகள்
புது ஓவர்சீயர்
வஸ்தாது வேணு
அமர வாழ்வு
சுண்டுவின் சந்நியாசம்
திருடன் மகன் திருடன்
இமயமலை எங்கள் மலை
பொங்குமாங்கடல்
ரங்கூன் மாப்பிள்ளை
பால ஜோசியர்
மாடத்தேவன் சுனை
நீண்ட முகவுரை
பாங்கர் விநாயகராவ்
தெய்வயானை
கவர்னர் வண்டி
தண்டனை யாருக்கு?
சுயநலம்