சிலவரிச் செய்திகள் – 22

  • ஆந்திராவில் தினமும் மக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் மனுக்களை பெறும் ’மக்கள் தர்பார் திட்டம் 2019 ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட்டது.
  • உத்திரபிரதேசம், வாரணாசியின் கங்கை நதியில் தசஅஷ்வமேத படித்துறை மற்றும் ராஜேந்திர பிரசாத் படித்துறைகளுக்கு நடுவே மிதக்கும் பயோ கழிவறை வசதி விரைவில் தொடங்கப்பட உள்ளது.
  • ஸ்வீடனின் சோலேன்டுனா நகரில் நடைபெற்ற போல்க்சாம் கிராண்ட்ப்ரீ தடகளப் போட்டியின் மகளிர் 1500 மீட்டர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.யு. சித்ரா தங்கம் வென்றார்.
  • தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மற்றும் 44 திரைப்படங்களை இயக்கி கின்னஸ் சாதனை புரிந்த பழம்பெரும் நடிகை விஜய நிர்மலா 2019 ஜூன் 26 அன்று காலமானார்.
  • நாட்டின் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான போர் விமானங்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களை அரசின் ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் (ழஹடு) பெற்றுள்ளது.
  • தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் (2019) அதிகபட்சமாக திருத்தணியில் 111.2 டிகிரி வெயில் ஜூன் 15 அன்று பதிவானது.
  • வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் 2019 ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.