ஆசிரியர் நியமனக் கலந்தாய்வு முகாம் இன்று துவக்கம்

ஆசிரியர் நியமனக் கலந்தாய்வு முகாம் இன்று துவக்கம்

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோருக்கான கலந்தாய்வு முகாம் சனிக்கிழமை தொடங்கி, செப்.5 வரையில் நடைபெற இருக்கிறது.

தமிழகம் முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 2353 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 10698 பட்டதாரி ஆசிரியர்கள், 1649 இடை நிலை ஆசிரியர்கள் என மொத்தம் 14700 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பணி நியமனம் அந்தந்த மாவட்ட மையங்களில் கலந்தாய்வு நடத்தப்பட்டு நியமன ஆணைகள் வழங்கப்படுகிறது. இதில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு சூலக்கரையில் உள்ள கேவிஎஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மையத்தில் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.

இதில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் காலிப்பணியிடங்கள் ஆக.30-ம் தேதியும், வேறு மாவட்டத்தில் உள்ள பணியிடங்களுக்கு ஆக.31-ம் தேதியும் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. அதேபோல், இடை நிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் காலிப்பணியிடங்கள் செப்.1-ம் தேதியும், வேறு மாவட்டத்தில் காலிப்பணியிடங்கள் செப்.2-ம் தேதியும் நடைபெறுகிறது. பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் காலிப்பணியிடங்கள் செப்.3-ம் தேதியும், வேறு மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் செப்.4-ம் தேதியும் நடைபெற இருக்கிறது.

தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளோர், ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கிய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டில் குறிப்பிட்டுள்ள தங்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில் மட்டுமே பங்கேற்க வேண்டும். அதோடு, கலந்தாய்வுக்கு வரும் போது அசல் கல்விச் சான்றுகள் மற்றும் தெரிவுக் கடிதம் ஆகியவற்றுடன் தவறாமல் கொண்டு வர வேண்டும். இந்த முகாம் காலை 9மணிக்கு தொடங்கி, தொடர்ந்து மாலை வரையில் நடத்தப்பட இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/5/d790946132/htdocs/exammaster.co.in/wp-content/plugins/slickquiz/php/slickquiz-front.php on line 59