அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்

அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்

தமிழகத்தில் ஏற்கனவே ஆண்டுக்கு ‘ 25 கோடி ஒதுக்கீட்டில், கிராமப்புற விளையாட்டுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. அந்தந்த பகுதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் இத்திட்டத்தின் கீழ், கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்த திட்டத்தின் மறு உருவாக்கமே அம்மா இளைஞர் விளையாட்டு திட்டமாகும். கிராமங்களில் உள்ள இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் மனவளத்தை மேம்படுத்தவும், கூட்டு மனப்பான்மையை உருவாக்கவும், அதை வெளிக் கொணரவும் 2019-20-ஆம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் ’அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த ‘ 76 கோடியே 23 லட்சம் நிதியையும் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.