அக்டோபர் 31

1931 – தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியானது.

1984 – இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்.

தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ்

Kalidas_sudesamitran_poster

எச்.எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி.ஜி வெங்கடேசன், டி.பி. ராஜலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதி, நாடக மேடைகளில் பாடப்பட்டு வந்தவை.

முதல் தமிழ்ப் படத்தின் பாடலாசிரியர் மதுரகவி பாஸ்கரதாஸ்.

இத்திரைப்படத்தில் கிட்டத்தட்ட ஐம்பது பாடல்கள் இடம் பெற்றிருந்தன.

ரத்தினமாம் காந்தி கை பாணமாம்”,

இந்தியர்கள் நம்மவர்க்குள் ஏனோ வீண் சண்டை ” போன்ற தேசபக்தி பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

இத்திரைப்படத்தின் முதல் காட்சி சென்னை ’சினிமா சென்டிரல் எனும் திரையரங்கில் 1931, அக்டோபர் 31இல் திரையிடப்பட்டது.

இந்திராகாந்தி

dcp278574242

இந்தியாவின் மூன்றாவது பிரதமர் இந்திராகாந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) 1917 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் நாள் (தேசிய ஒருமைப்பாட்டு தினம்) காஷ்மீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேருவிற்கும், கமலா நேருவுக்கும் மகளாகப் பிறந்தார்.

1959 மற்றும் 1960 – இல் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ஆனார்.

1964 மே 27 இல் நேரு மரணமடைந்தார். புதிய பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரியின் வலியுறுத்தலின் பேரில் இந்திய தேர்தல்களில் போட்டியிட்டு, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதன் மூலம் இந்திய அமைச்சரவையிலும் பங்கெடுத்தார்.

ஜனவரி 19, 1966 இல் பிரதம மந்திரியாக பதவியேற்ற இவர் மார்ச் 24, 1977 வரை பதவியில் இருந்தார்.

1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைப்பெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார்.

14 ஜனவரி 1980 இல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984 இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.

சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற் கோயிலுக்குள் ஆயுதங்களுடன் ஒளிந்திருப்பதாகக் கருதப்பட்ட தீவிரவாதிகளையும், அவர்களின் தலைவரையும் பிடிக்க இராணுவம் பொற்கோயிலுக்குள் புக அனுமதி வழங்கினார்.

தொடர்ந்து நடைபெற்ற படை நடவடிக்கைகள் இந்திராவைச் சீக்கியர்களின் கோபத்துக்கு ஆளாக்கியது. இதன் தொடர்ச்சியாக அக்டோபர் 31, 1984 இல் சீக்கியர்களான, அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x