அக்டோபர் 30

அக்டோபர் 30

1963-இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மறைந்தார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்ற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த குடும்பத்தில் அக்டோபர் 30, 1908-ல் உக்கிரபாண்டித் தேவருக்கும், இந்திராணி அம்மையாருக்கும் பிறந்தார். 1920 ஆம் ஆண்டில் இருந்து அப்போதைய மதராஸ் மாகாணத்தில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமலில் இருந்த குற்றப் பரம்பரைச் சட்டம் என்கிற சட்டத்திற்கு எதிராக தேவர் அவர்கள் முதன் முதலாக போராடினார். இந்தப் போராட்டத்தில் தேவருடன் இருந்த Dr. P. வரதராஜூலு நாயுடு, பெருமாள் தேவர், மற்றும் நவநீதகிருஷ்ண தேவர் ஆகியோர் இணைந்த சமாதான பேச்சுவார்த்தை குழு நியமிக்கப்பட்டு அப்போதைய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தேவரின் தலைமையில் போராட்டம் சீற்றமடைந்து இந்தச் சட்டம் நீக்கப்பட்டது.

1937 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இராமநாதபுரம் தொகுதியில் தேவர் போட்டியிட்டார். மகத்தான வெற்றி பெற்றார்.

1939 ஆம் ஆண்டு திரிபுராயில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் தேவர் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை எதிர்த்து பட்டாபி சீதாராமையா போட்டியிட்டார்.

1948 இல் தேவர் பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ்நாட்டு தலைவரானார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் 1963 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் நாள் அவரது 55வது பிறந்த நாளன்று இயற்கை எய்தினார்.

ஆன்மீகத்தில் தேவர் கொண்டிருந்த ஞானமும், ஆன்மீக சொற்பொழிவுகளும் இவருக்குத் தெய்வத்திருமகன் என்ற பெயரைப் பெற்றுத்தந்தன.

இவர் மொழிந்த வாசகங்கள்
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்”. வீரமற்ற விவேகம் கோழைத்தனம் – விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/5/d790946132/htdocs/exammaster.co.in/wp-content/plugins/slickquiz/php/slickquiz-front.php on line 59