அக்டோபர் 14

அக்டோபர் 14

உலகத் தர நிர்ணய நாள் (World Standard Day)

1969 ம் ஆண்டிலிருந்து அக்டோபர் 14 ஆம் தேதி உலகத் தர நிர்ணய நாளாக அனுசரிக்கப்படுகிறது.

சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (ஐ.எஸ்.ஓ)
அனைத்துலக மின் தொழில் நுட்ப ஆணையம் (ஐ.ஈ.சி.)
அனைத்துலகத் தொலைத் தொடர்பு ஒன்றியம் (ஐ.டி.யூ)

ஆகிய நிறுவனங்களின் வழிமுறைகளுக்கு உட்பட்டு உலகத் தரங்களை உருவாக்கப் பாடுபடும் தொழில்துறை வல்லுநர்களின் சேவையைப் பாராட்டவும் பொருள்கள் மற்றும் சேவைகளில் விளங்க வேண்டிய சீர்மைத் தன்மையின் அவசியத்தை உலகளாவிய ரீதியில் வலியுறுத்தவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

IEC, ISO மற்றும் ITC என்பன சந்தைகளை உருவாக்கல், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், பணக்கார மற்றும் வறிய நாடுகளுக்கிடையேயான வேறுபாடுகளைக் களைவது, போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.இந்தியாவில் ஒரே சீரான தர முறைகளை வகுப்பதிலும் சான்றளிப்பதிலும் இந்தியத் தர நிர்ணய அமைப்பு (Bureau of Indian Standards – BIS) ஈடுபட்டுள்ளது. ஐ.எஸ்.ஓ-வில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைப்பு இது ஆகும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x